யாழில் குண்டு தாக்குதல்..!2 பேர் கைது

0
338

(Petrol bomb attack jaffna)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடாத்திவிட்டு பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினையே காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY