சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து காத்தான்குடியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

0
366

விசேட நிருபர்

சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து காத்தான்குடியில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவியும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் காத்தான்குடியிலுள்ள அதன் அலுவலகத்திற்கு முன்னாள் இடம் பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிரியாவில் குழந்தைகள் பெண்கள் என மனித உயிர்கள் கொல்லப்படுவதை கண்டித்ததுடன் உடனடியாக அங்கு யுத்த நிறுத்தத்தை சிரியா அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சுலோகங்களை தாங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC06767 DSC06772 DSC06774 DSC06785 DSC06789 DSC06781

LEAVE A REPLY