313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனாவினால் மட்டக்களப்பில் வைத்து வழங்கி வைப்பு

0
184

(விஷேட நிருபர், அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனாவினால் மட்டக்களப்பில் வைத்து இன்று (03) சனிக்கிழமை வழக்கி வைக்கப்பட்டன.

இதன் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம உட்பட முன்னாள் மாகாண அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்.ஈ சமய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 300 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான பத்திரத்தை அதிபர்களிடம் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

DSC06719 DSC06727 DSC06733 DSC06743 DSC06751 DSC06755 DSC06759

LEAVE A REPLY