அதியுயர் சாதனை படைத்த இரத்ததான நிகழ்வின் பங்குபற்றுனர்களுக்கு நன்றிகள்

0
284

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று கடந்த 18.02.2018 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இந் நிகழ்விற்கு தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் Dr.றுக்ஸான் பெல்லன பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் எமது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சாம ஸ்ரீ தேச மானிய, முகிப்புல் உம்மா Dr. MSM. ஜாபிர் அவர்களுடன் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய நிபுணர் Dr. நாமல் பண்டார அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த முகாம் நடைபெற்று முடிந்தது.

இந்த இரத்த தான முகாமிற்கு காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை மற்றும் பூநொச்சிமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 600 இற்கும் அதிகமான சகோதர சகோதரிகள் மிகவும் ஆர்வத்துடன் சொற்ப நேரத்துக்குள் கலந்து கொண்டனர். இதில் 527 பேரிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்த இரத்த தான முகாமானது கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதி கூடிய இரத்த தானம் செய்யப்பட்ட நிகழ்வாகவும் இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற இரத்த தான முகாம்களில் அதி கூடிய அளவில் வழங்கப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், அகில இலங்கை ஜம்யியத்துல் உலமா, காத்தான்குடி ஜம்யியத்துல் உலமா, உரிய நேரத்திற்கு தகவல்களை வழங்கி இரத்த தான முகாமில் அதிகமான இரத்த வழங்குனர்களை முனைப்புடன் பங்குபற்றச் செய்த சமூக வலைத்தளங்கள், Twitter செய்திகளை அனுப்பியவர்கள் CARES அமைப்பு மற்றும் SRD அத்துடன் இந்நிகழ்வினை ஒருங்கினைப்புச் செய்து சிற்றுண்டி உபசாரங்களில் பங்கெடுத்த அல்ஹாஜ் றிஸ்வான் ஹாபிஸ் அவர்களுக்கும் மற்றும் Thasbeeh Volunteer Network, Norfolk foods ஆகிய நிறுவனங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

காத்தான்குடி தள வைத்தியசாலை சாதனை படைத்தது

அத்தோடு தங்களது உறுப்பினர்களை உற்சாகமாகப் பங்குகொள்ளச் செய்த சமூக நல அமைப்புகளான ஆய்வுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பு (SRD) தாருல் அதர் அத்தஅவிய்யா, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், இஸ்லாமிய இளைஞர் முன்னணி, அஷ்-ஷுப்பான் நலன்புரி அமைப்பு, இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் நிலையம், பிறில்லியன்ட் அமைப்பு, தேசிய தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், CARES அமைப்பு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, சிவில் பாதுகாப்பு அமைப்புக்கள், மீஸான் ஸ்ரீலங்கா, IFSEC, USE, AMAANA, காத்தான்குடி மீடியா போரம், பாதுகாப்பு அதிகாரிகள், காத்தான்குடி கலாசார மத்திய நிலையம், அல் பாரி நிறுவனம், அல்மனார் கற்கை நிலையம், Kattankudy Community மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு விஷேடமாக இந் நிகழ்வில் தனது ஆதரவாளர்களுடன் பங்கு கொண்ட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும், எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆசியினை வழங்கி வைத்ததுடன் தங்களது ஆதரவாளர்களை பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MP அவர்களுக்கும் எமது விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேலும் சமூகத்தின் நலன் கருதி வேடுபாறுகளை மறந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய அரசியல் ஆதரவாளர்கள், இந் நன்றி நவிலலில் சுட்டிக்காட்ட தவறவிடப்பட்ட ஏனைய அமைப்புக்கள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து வழங்குனர்கள் அனைவருக்கம் எமது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு எதிர்வரும் காலங்களிலும் எமது வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலை அத்தியட்சகர், ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைறன்.

Dr. MSM. ஜாபிர்,
வைத்திய அத்தியட்சகர்,
ஆதார வைத்தியசாலை,
காத்தான்குடி.

LEAVE A REPLY