அதிக பிள்ளைகளைப் பெற்றவருக்கு பண உதவி

0
247

(வாழைச்சேனை நிருபர்)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவினால் சர்வதேச முதியோர் தின அனுஸ்டானத்தினை முன்னிட்டு அதிக பிள்ளைகளை பெற்ற தாய்க்கு பண உதவி வழங்கும் நிகழ்வு செயலகத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எல்.றியாஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச முதியோர் தின அனுஸ்டானத்தினை முன்னிட்டு எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட அதிக பிள்ளைகளை உடையவர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவிக்கும் முகமாக பண உதவிகள் சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதியில் வசிக்கும் எண்பத்தியெட்டு வயதுடைய எம்.எல்.வெள்ளாட்சி உம்மா என்பவர் பதினைந்து பிள்ளைகளைப் பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.வெள்ளாட்சி உம்மா என்பவருக்கு இருபத்தையாயிரம் ரூபாய்க்கான காசோலையினை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் வழங்கி வைத்தார்.

01 (5)

LEAVE A REPLY