ஒரு பொம்மலாட்டம்

0
431

(Mohamed Nizous)

ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப இழுபறியாக இருக்குது
மூணு பேரு நடுவிலே
முடிவு எடுக்க முடியலே

நல்ல ஆட்சி தருவோம் என்று
உள்ளே வந்தாக- பின்னர்
முறியில் மாட்டி பொறியில் சிக்கி
முறிந்து போனாக.
பாகன் யானை பிரச்சினையில்
படுக்குது கட்சி- இதைப்
பயன் படுத்தி ஆட்சி பிடிக்க
பாயுது சால்வை.

‘ஆப்ப’ தீஞ்சு கருகும் வரைக்கும்
அசந்து தூக்கம் – எழும்பி
அடுப்புக்கு ஏசி என்ன செய்ய
ஐயா தலைவா!
மொட்டைச் சேர்க்க உள்ளே அச்சம்- முட்டிடுவாரோ
ஆனை சேர்க்கவும் அடுத்த அச்சம்-
அடிச்சு விடுமோ?

உள்ள சபைகள் அண்ண வென்றார்
ஒரேயடியாக-அந்த
உசாரில் இப்போ ஓடித் திரிகிறார்
ஆட்சியைப் பிடிக்க
ஆட்கள் போதா காரணத்தால்
அவதிப் படுகிறார்-அவரின்
நோக்கம் அறிந்து கொஞ்சப் பேரு
பாயப் பார்க்கிறார்.

LEAVE A REPLY