தேர்தல் வன்முறைகளை இனவாதமாக சித்தரிக்க வேண்டாம்; நாமல் ராஜபக்‌ஷ

0
280

தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களின் பழிகளை, எங்கள் மீது சுமத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற விம்பங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தோற்றுவிக்காமல், நல்லாட்சி ஆதரவாளர்கள் நேர்மையான அரசியல் செய்ய முன் வர வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நேர்மையான முறையில் தோற்கடிக்கப்படவில்லை. மக்களிடம் பொய்களை கூறியும், சூழ்ச்சிகள் செய்தும் தோற்கடிக்கப்பட்டிருந்தோம்.அவ்வாறு அவர்கள் செய்ததற்கான தண்டனையை,இத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இத் தேர்தலில் எங்கள் கட்சியானது மூவின மக்களினதும் ஆதரவை பெற்றிருந்தது. எமக்கு கிடைத்துள்ள ஆதரவை எப்படி எதிர்கொள்வதென,நல்லாட்சி அரசினர் தினறிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் பொய்களை, சூழ்ச்சிகளையும் கையில் ஏந்தியுள்ளார்களா என்ற அச்சம் தோன்றுகிறது.

ஒரு தேர்தலை தொடந்து வன்முறைகள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. எங்களுடைய கட்சி தேர்தல் செயற்பாடுகளுக்கு, தனது வர்த்தக நிலையத்தை தந்தார் என்பதற்காக, உலப்பனையில் ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பேருவளையை சேர்ந்த, எங்களுடைய குடும்ப நண்பரும், கூட்டு எதிர்க்கட்சியின் முஸ்லிம் முற்போக்கு முன்னனியின் முக்கியஸ்தர் அஸாப் அஹமட், பேருவளை ஐ.தே.க அமைப்பாளரான இப்திகார் ஜெமீலின் சகோதரரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இது போன்ற ஏராளமான வன்முறைச் சம்பவங்கள், எங்களை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறியுள்ளது. இதன் காரணமாக எங்களது கட்சியுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

இவற்றை கண்டிக்கவோ, வெளிப்படுத்தி ஆதரவு தேடவோ யாருமில்லை.ஒரிரு இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை, எங்களோடு தொடர்புபடுத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்த சிலர் முனைகிறார்கள்.

இவர்களது, எங்கள் மீதான இவ்வாறான குற்றச் சாட்டுக்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில், எங்களுக்கு சாதகமான வகையில் கருத்து தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்ற போதும்,இந்த சதி வலைக்குள் முஸ்லிம்களில் உள்ள சில முக்கிய புள்ளிகள் அகப்பட்டுள்ளமை கவலை தருகிறது.

மீண்டும் சூழ்ச்சிகளை செய்து ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்காது, நேர்மையான முறையில் ஆட்சியை தக்க வைக்க முன் வர வேண்டும். நேர்மையான முறையில் செய்யப்படும் முயற்சியே, நீண்ட காலம் நிலைத்திருக்க செய்யும் என வர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY