அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு நிஸார்தீன் முஹம்மட் வெற்றியடைந்தார்

0
120

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிண்ணியா நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் பெரியாற்று முனை வட்டாரத்தில் போட்டியிட்ட நிஸார்தீன் முஹம்மட் வெற்றி பெற்றுள்ளார்.

எகுத்தார் நகர், பெரிய கிண்ணியா, பெரியாற்று முனை போன்ற மூன்று கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய பகுதியில் மக்களின் வாக்குப் பலத்தினால் இவர் கிண்ணியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது வெற்றிக்காக உழைத்து பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் மேலும் வாக்குகளை அளித்து தன்னையும் வெற்றி பெறச் செய்த பெரியாற்று முனை வட்டார மக்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

LEAVE A REPLY