வாக்களித்து வெற்றிபெற வைத்த என் மக்களுக்கு நன்றிகள்: எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர்

0
142

(எம்.ரீ. ஹைதர் அலி)

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், மக்களாகிய நீங்கள் இந்த சமூகத்தில் என்னை ஒரு தலைவனாக ஏற்று என்னை ஆதரித்தமைக்கு எதிர்காலத்தில் என்னலான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு சேவை செய்ய காத்திருக்கும் உங்களில் ஒருவனாக எனக்கு வாக்களித்த தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் அனைத்து நல்லுறவுகளுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிளைத் ரெிவித்துக் கொள்கின்றேன்.

அது மாத்திரமல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொண்ட இந்த வெற்றியினை ஆதரவாளர்கள் அனைவரும் அமைதியான முறையில் மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூறும் இன்றியும், பட்டாசுகள் வெடிப்பதை தவித்தும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்குவதன் மூலம் அமைதியான முறையில் வெற்றிக்களிப்பை கொண்டாடுமாறும் வினயமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத் தொகுதி அமைப்பாளருமான நமது பிரதேசத்தின் சிரந்ததொரு அரசியல் தலைமையான கணக்கறிஞர் HMM.ரியாழ் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் முகமாகவும், அவருடைய வழிகாட்டுதலின் கீழும் மக்களுக்கான எமது பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆட்சி அதிகாரங்களை வழங்குபவனும் அல்லாஹ் அதனை பிடிங்கி எடுப்பவனும் அவனே என்ற நாமத்துடன் எனது வாழ்த்துறையை நிறைவு செய்கின்றேன்.

LEAVE A REPLY