‘முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அவசரமாக கூடுகிறது என்ற செய்திக்கு கட்சியின் செயலாளர் எம். நயீமுல்லாஹ் மறுப்பு

0
241

(முகம்மட் அஸ்மி)

‘முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அவசரமாக கூடுகிறது’ என்ற தலைப்பில் இன்றைய (12.02.2018) வீரகேசரி பத்திரிகையில் செங்கலடி நிருபரால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கூட்டங்களுக்கான அழைப்பு விடுக்கும் அதிகாரம் கட்சி செயலாளரிடம் மாத்திரமே இருக்கையில் இணைத்தலைவர் ஒருவரால் இவ்வாறான கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது எவ்விதத்திலும் செல்லுபடியாகாது எனவும், அவ்வாறான கூட்டங்களில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் தமது கட்சி அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2018-02-12 at 22.36.30மேற்படி கட்சியின் செயலாளர் என்ற வகையில் தனக்கோ மற்றுமொரு இணைத்தலைவர் உட்பட பல உயர்பீட உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டம் பற்றிய எதுவித அறிவித்தலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், இப்படியானதொரு முறையற்ற கூட்டம் குறித்து பத்திரிகை வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாகவும் கூறிய அவர் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற முடிவுகளின் படி பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் உரிய முறையில் கூட்டப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

எனவே, கட்சியின் ஆதரவாளர்கள் இந்த விடயத்தில் எதுவித தடுமாற்றமும் கொள்ளத் தேவையில்லை எனவும், முறையற்ற விதத்தில் அதிகாரமற்ற ஒருவரால் கூட்டப்படவுள்ளதாக வெளிவந்துள்ள இச்செய்தி பற்றி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் என்ற வகையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தாம் அறிவித்துள்ளதாகவும் எம். நயீமுல்லாஹ் கூறினார்.

LEAVE A REPLY