நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல்

0
245

(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி கடற்கரை வீதி CB காசிம் லேனில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்தியக் காரியாலயத்தில் இன்று (12) அதிகாலை வைக்கப்பட்ட குண்டுகளில் இரண்டு வெடித்துள்ளன. மேலும் எட்டுக் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் அவ்வளாகத்திலிருந்து மீட்டுள்ளனர்.

இக்குண்டு வெடிப்பின் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமாக்கபட்டுள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் சிலவும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

கடந்த 10 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே வகையான குண்டொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியல் வேட்டபாளர் ஒருவரின் வீட்டிலும் வைக்கப்பட்டு அது வெடித்ததன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பினர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தேர்தல் முடிந்ததன் பின்னால் இவ்வாறான அடாவடித்தனங்களும், தாக்குதல்களும் அவ்வப்போது சிரேஸ்ட அரசியல் வாதி ஒருவரின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது அந்த வகையிலேயே இந்த சம்பவமும் இடம் பெற்றிருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இக்குண்டு வெடிப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழிலுல் ஹக் அவர்கள்.

இன்று அதிகாலை 3.55 மணியளவில் எமது பிராந்திய அலுவலகம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் எமது உயிரையும் உடமைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாம்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் தேர்தவின் பின்னர் இவ்வாறான பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்க விடயமாகும்.

இது தொடர்பாக நாங்கள் காத்தான்குடி பொலிஸாருக்கும் ஏனைய உயர்மட்டங்களுக்கும் முறைப்பாடுகளைச் செய்துள்ளோம்.
அத்தோடு காத்தான்குயிலுள்ள உலமாக்கள் புத்தி ஜீவிகள் மற்றும் பொது நிறுவனங்கள்

இவ்விடயத்தில் தலையிட்டு இவ்வாறான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இத்தாக்குதல் சம்பவம் நடை பெற்ற வேளையில் பொலிஸார் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் நாம் அறிகிறோம்.

01 02

LEAVE A REPLY