ஈ.பி.டி.பி.யிடம் ஆதரவு கோரி கெஞ்சும் கூட்டமைப்பு

0
214

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவருவதுடன் தேர்தல் காலங்களில் விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளது.

கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளதாத சபைகளுக்கு எதிர்தரப்பில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய நிலையில் பல்வேறு முயற்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுவருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் 10 ஆசனங்களை யாழ் மாநகர சபைக்காக பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் பேரம் கலந்துரையாடியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரன் மற்றும் சுட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சில் ஈடுபட்டிருப்பதாக அந்தவட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் போது நேரடியாக இல்லாமல் மறைமுக ஆதரவை வழங்கவேண்டும் என்று சுமந்திரன் கோரிக்கைவிடுத்ததாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

LEAVE A REPLY