அம்பாறையில் ஹக்கிம் வெட்டிய குழியில் விழ்ந்த யானை

0
1089

1) தபால் வாக்கெடுப்பு முடிந்து தன்னோடு வந்து மில்லியன் பேரம் பேசிய ஹக்கிமை ஜனாதிபதி ஆதரிப்பதா ?

2) பல அச்சுருத்தலுக்கு மத்தியில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக பதவி பட்டங்களை தூக்கி ஏறிந்து விட்டு தன்னை முதலில் ஆதரித்த றிசாத் பதியூத்தீனை ஜனாதிபதி ஆதரிப்பதா ?

3) முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தனக்கு சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மைத்திரி என்ற வழிக்கு கொண்டு வந்த ஹசன் அலி அவர்களை ஜனாதிபதி ஆதரிப்பதா ?

மேற்குறிப்பிட்ட கேழ்வி இன்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது

நடைபெற்ற உள்ளூராச்சி தேர்தலில் பல கட்சிகள் அதிக ஆசனம் எடுத்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பாண்மை ஆசனம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது அதனால் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் கட்சிகளின் நிலை இருக்கிறது

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை முஸ்லிம் பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய சமதான கூட்டமைப்பு மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அதன் வாக்கு வங்கி கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது அதனால் நிந்தவூர் சம்மாந்துறை பொத்துவில் காரைதீவு அக்கறைப்பற்று இறக்காமம் அட்டாளைச்சேனை போன்ற சகல பிரதேச சபைகளிலும் அந்த கட்சி எதிர்பார்த்ததை விட கூடுதலான ஆசனங்கள் பெற்று வரலாறு படைத்த போதும் ஆட்சி அமைக்க ஒரு கட்சியின் உதவியை நாடி நிற்கின்ற நிலையில் அதற்கு யார் உதவி செய்வார் என்று சிந்திக்கும் போது பொத்துவில் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் அதிக ஆசனம் எடுத்துள்ள ஜனாதிபதி தலைமை தாங்கும் சுதந்திர கட்சியுடன் (கை) இனைந்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்து தானும் ஆதரவை பெறுவது சிறந்தது என மக்கள் கருதுகின்றனர்

மயில்
மயில் சின்னம் அதிக ஆசனம் எடுத்துள்ள நிந்தவூர் சம்மாந்துறை பிரதேசங்களில் அது ஆட்சி அமைக்க ஒரு ஆசனம் தேவைப்படுகின்றன அந்த ஆசனம் சுதந்திர கட்சியிடம் தான் உள்ளது அதை சுதந்திர கட்சி அப்படி வழங்கும் பட்சத்தி இரு பிரதேச சபைகளை மயில் ஆட்சி அமைத்து முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை பிடித்த சதானையை நிலை நாட்ட கையயின் உதவி கட்டாயம் தேவைப்படுகிறது அது கிடைக்கலாம் என்ற எதிர்பாப்புடன் போராளிகள் அடங்கியுள்ளனர் சத்தமே இல்லை

குதிரை

தேசிய காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை அது அக்கறைப்பற்றில் எந்த சிக்கலும் இல்லாமல் இரு சபைகளிலும் ஆட்சி அமைக்கும் போது அதிக ஆசனம் எடுத்த அட்டாளைச்சேனையில் ஆட்சி அமைக்க 3 ,4 ஆசனம் தேவைப்படுகிறது அந்த ஆசனம் மயிலிடம் 3 மூன்றும் மொட்டுவிடம் 01 ஒன்றும் இருக்கும் போது அதை பெறுவது மூலமே ஆட்சியை அமைக்க முடியும் அந்த ஆதரவை அதாவுல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியின் உதவியுடன் தான் அமைச்சர் றிசாத்திடமிருந்து பெற முடியும் இந்த நிலையில் ஜனாதிபதி அவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு நிந்தவூர் சம்மாந்துறையில் ஆட்சி அமைக்க உதவினால் நிச்சயம் அட்டாளைச்சேனையில் குதிரை ஆட்சியமைக்க அமைச்சர் றிசாத் உதவி செய்வார் இப்படி தான் நடக்கும் சூழ் நிலை காணப்படுகின்றன அதே நேரம் பழைய நன்பரின் உவியுடன் மொட்டுவுடைய உதவியையும் அதாவுல்லாஹ் பெற்றுக்கொள்வார் அதனால் அட்டாளைச்சேனையில் யானை ஆட்சி அமைக்காது என்ற விடயம் தெளிவாக புரிகிறது

தனக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு பெரும் உதவி செய்த அமைச்சர் றிசாத் ஹசன் அலி ஆகியோர் ஒன்றினைந்து ஐக்கிய சமதான கூட்டமைப்புடன் இருக்கும் போது அவர்களின் உதவி எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு கட்டாயம் தேவைப்படும் அதனால் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் செய்த உதவிக்கு ஜனாதிபதி நன்றிக் கடனுடன் அமைச்சர் றிசாத் ஹசன் அலி கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உதவி செய்யலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர் அது நடக்கலாம்

யானை

யானையை வளர்க்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் அவர்கள் அம்பாறையில் யானை சின்னத்தில் போட்டியிட்டு அட்டாளை ச்சேனை சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் ஆட்சி அமைக்க தலா ஒரு ஆசனம் என்ற நிலையில் இருக்கும் போது இதற்கு உதவி செய்வது யார் என்று பார்த்தால் ஜனாதிபதிஅவர்களின் கை தான் உதவி செய்ய வேண்டும் அதற்கு அம்பாறை மாவட்டத்தில் சுதந்திர கட்சியின் வெற்றிக்காக போராடிய அதாவுல்லாஹ் அவர்களின் விருப்பமே ஜனாதிபதிக்கு தேவைப்படும் அதனால் தனது எதிரியான ஹக்கிமுக்கு அவர் உதவி செய்யாமல் ஹக்கிமை அம்பாறையை விட்டு விரட்டும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கே உதவி செய்வார் என்பதில் சந்தேகமில்லை அத்தோடு குதிரைக்கு அட்டாளைச்சேனையில் மயிலின் உதவி தேவைப்படுகிறது அதனால் அதாவுல்லாஹ் அவர்களுக்கு அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியுள்ளதால் அவர் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பார் என்பது உறுதி அதனால் யானைக்கு எந்த சபையிலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும் உருவாகி விட்டது என்று தான் கூற வேண்டும்

கடந்த காலங்களில் அம்பாறையில் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் செய்துள்ளார் என்ற உண்மை ஆதாரங்களுடன் அவரது நடவடிக்கைகளால் மக்கள் புரிந்துள்ளனர் இதனால் ஹக்கிம் அவர்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அம்பாறை மக்கள் நினைத்துள்ளனர் அத்தோடு முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்க அரசியல்வாதிகளும் ஹக்கிமுக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் போது அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸின் யானை ஆதரவாளர்கள் ஆட்சி செய்ய ரனிலை தவிர வேறு எந்த கட்சியும் ஆதரவு வழங்காது என்பதை தேர்தல் முடிவுகள் சொல்கின்றன

அம்பாறை மக்களை பொறுத்த வரை அவர்கள் யானைக்கு எதிராகவே குதிரை மயில் சின்னங்களுக்கு வாக்களித்தனர் அதனால் யானைக்கு குதிரையே மயிலோ ஆதரவு வழங்க மக்கள் விரும்பமாட்டார்கள் அப்படியான துரோகத்தை அதாவுல்லாஹ் றிசாத் ஆகியோர் செய்யாவும்மாட்டார்கள் அதனால் இவர்களின் உதவியின்றி யானை எந்த சபையில் எப்படி ஆட்சி அமைப்பது ? என்று புரியாத புதிராக உள்ளது

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஹக்கிம் செல்வாக்கு இழந்து விட்டார் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது அதனால் ஹக்கிமை நம்பி பிரயோசனம் இல்லை என்று ஜனாதிபதிக்கும் தெரியும் அதனால் ரனில் ஹக்கிம் ஜோடி போகட்டும் மக்கள் ஆதரவு கொண்டஅமைச்சர் றிசாத் அவர்களை ஆதரிப்போம் என்ற முடிவை ஜனாதிபதி எடுக்கலாம்

கல்முனை

கல்முனை அரசியல் நிலவரத்தை பொறுத்தமட்டில் சமுதாயங்களின் நலனுக்காக நல்லாச்சி ஏற்படலாம்

யானை என்றால் அம்பாறையில் ஹக்கிம் வெட்டிய படு குழியில் விழ்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் அதாவது அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சின்னமான மரத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தொடர்ந்து யானையுடன் போட்டியிட்டதால் சந்தேகம் கொண்ட அம்பாறை மக்கள் ஹக்கிமுக்கு நல்ல பாடம் புகழ்ட்டி ஆட்சி பொறியியல் சிக்கவைத்துள்ளனர் இந்த பாடம் ஹக்கிம் வாழ்க்கையில் படிக்காத பாடமாக இருக்கும்

அதாவுல்லாஹ் றிசாத் இனைந்து கூட்டாச்சி உருவானால் அது அவர்களின் அரசியல் வாழ்க்கையில் பிரியாத உறவாக தான் இருக்கும் அதனால் ஹக்கிம் அவர்களின் கிழக்கு அரசியல் முடிந்த கதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஜெமீல் அகமட்

LEAVE A REPLY