மட்டக்களப்பு கருவேப்பங்கேணியில் கசிப்பு வேட்டை: ஒருவர் கைது, உற்பத்திப் பொருட்களும் மீட்பு

0
197

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று திங்கட்கிழமை பிற்பகல் 29.01.2018 பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டபோது அங்கிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு கசிப்பு காய்ச்சுவதில் ஈடுபட்டிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கசிப்பு உற்பத்தி செய்யும் இரகசிய இடத்தைப் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 42 லீற்றர் கோடா மற்றும் 13 லீற்றர் கசிப்பு ஆகியவற்றையும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் கசிப்பு காய்ச்சுவதில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

2

LEAVE A REPLY