முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் ஜூன் மாதத்திற்குள் நிரப்பப்படும்: கி.மா. ஆளுநர்

0
194

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாக காணப்படுகின்ற 361 முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிரப்பப்படும் என இன்று (31) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்திகள் குறித்தும் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பது பற்றியும் ஆராய்வதற்காக சென்ற போதே ஆளுனர் இதனை தெரிவித்தார்.

அக்கறைப்பற்று.ஆலையடிவேம்பு.
திருக்கோயில்.இறக்காமம் போன்ற பிரதேச சபைகளில் அதிகளவான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆளுனர் ரோஹித போகொல்லாகம வெற்றிடங்களை நிரப்புவதாகவும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குமாறும் ஆளுனர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY