அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கடிதம்

0
1539

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

அனாமோதயமான போலியான ஒரு குரல் பதிவொன்று எனது போட்டோக்களுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த ஒலிப்பதிவில் சொல்லப்படும் விடயங்களையும் அது யாரால் பரப்பப்படுகிறது என்பதனையும் அத்தோடு இது என்ன சந்தர்ப்பத்தில் பரப்பப்படுகிறது என்பதனையும் பார்க்கும் போது இராஜாங்க அமைச்சர் அல்லது அவரது அணியினரே இந்த விசமத்தனமான காரியத்தை தமது வழமையான பாணியில் செய்திருக்கிறார்கள் என நம்புகிறேன்.

இது தொடர்பில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தையும் அனுப்பிவைத்துள்ளேன்.

அன்புடன்,
அஸ்ஸலாமு அலைக்கும்.!

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு

நேற்றைய உங்கள் ‘ஊழல்..’ உரைகள் பற்றி அறிந்தேன். உங்கள் உரையின் ஒரு சிறிய பகுதியை மாத்திரம் இதுவரை கேட்டு முடித்துள்ளேன். உண்மையிலிருந்து மக்களை திசை திருப்புகின்ற உங்களது வழமையான வேலையை செய்திருக்கின்றீர்கள்.

உண்மைகளை பொய்களால் அடக்கிவைக்க முடியும்; அழித்து விட முடியாது.

இன்ஷா அல்லாஹ், உங்கள் விளக்கங்கள் தொடர்பில் மிகத் தெளிவான ஆதரபூர்வமான பதில்களை மிக விரைவில் மக்கள் முன்வைப்போம்.

இதற்கிடையில் எனது குரலில் பேசுவது போல ஒருவரை பேசவைக்க முயற்சித்து அதனை எனது சில போட்டோக்களுடன் இணைத்து ஒரு போலியான குரல்பதிவு பரப்பப்பட்டு வருகிறது. அந்த ஒலிப்பதிவில் சொல்லப்படும் விடயங்களையும் அது யாரால் பரப்பப்படுகிறது என்பதனையும் அத்தோடு இது என்ன சந்தர்ப்பத்தில் பரப்பப்படுகிறது என்பதனையும் பார்க்கும் போது உங்களினால் அல்லது உங்கள் அணியினராலேயே செய்யப்படுகிறது என்பதனை புரிய முடிகிறது. இந்த விசமத்தனமான காரியத்தை தமது வழமையான பாணியில் செய்திருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

ஆனால் தவறு செய்கின்ற எல்லோருமே தாம் மாட்டிக் கொள்வதற்கான தடையங்களை விட்டு வைப்பது போல நீங்களும் ஒரு காரியத்தை செய்து இருக்கிறீர்கள்.

அதாவது எனது உரைகள் அனைத்துமே எனது உத்தியோக பூரவ முகநூல் பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமாக நிரம்பிக்கிடக்கின்றன. அனாமோதயமாக பரப்பபட்டுள்ள அந்த ஒலி வடிவத்தில் கேட்கும் குரலை எனது உண்மையான குரலோடு ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் அது போலியானது என்பதனை கண்டு பிடித்திருக்கிறார்கள். இவ்வாறு மாட்டிக் கொள்ள வேண்டிவரும் என்பதனை நீங்கள்தான் சிந்திக்கத் தவறிவிட்டீர்கள்.

இன்னுமொன்றையும் உணரத் தவறிவிட்டிருக்கிறீர்கள்.

கடந்த 30 வருடங்களில் உங்களது அரசியல் வரலாற்றையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதுபோலவே எமது அரசியல் வரலாற்றையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பொய் எங்கிருக்கிறது உண்மை எங்கிருக்கிறது என்பதனையும் மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த பல வருடங்களாக தொடரும் உங்கள் அரசியல் சரிவு இதைத்தான் பிரதிபலிக்கிறது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத் தெளிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதுதான் உங்களது துரதிஸ்டமாகும்.

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களிலாவது நேர்வழி கிடைக்க வேண்டும் எனப் பிரார்ததியுங்கள்.

அதே வேளை இறையச்சம் இல்லாதவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை என அல்குர்ஆன் கூறுகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

வஸ்ஸலாம்.
அன்புடன்,
பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்.

LEAVE A REPLY