கிண்ணியா மற்றும் மூதூர் பஸ் டிப்போ நேரசூசி குளறுபடியால் முறுகல் நிலை

0
222

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மூதூர் டிப்போ மற்றும் கிண்ணியா டிப்போ இரவு நேர 10 மணி போக்குவரத்தில் இரு குழுக்களிடையே நேற்றிரவு (26) திருகோணமலை கொழும்பு பயண சேவையில் நேரசூசி பிரச்சினை காரணமாக கிண்ணியா ஹட்டன் நெசனல் வங்கிக்கு முன்னால் இரு குழுவினரிடையே ஏற்பட்ட பல சிக்கல்கள் காரணமாக நேர தாமதம் ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மூதூரில் இருந்து வரும் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் இரவு நேரத்தில் கிண்ணியாவூடாக ஊடறுத்துச் செல்வதால் அதே நேரத்தில் இரவு 10 மணிக்கு கிண்ணியா பஸ் டிப்போவினாலும் இரவு 10 மணிக்கு பஸ் சேவை இடம்பெறுகின்றது இரண்டும் ஒரே நேரத்தில் செல்வதால் கிண்ணியா பஸ் டிப்போ பஸ் வருமானம் குறைவாக காணப்படுகிறது.

மேலும் இதனால் ஊழியர்களுக்கான சம்பளப் பிரச்சினைகளும் காணப்படுவதாகவும் கிண்ணியா பஸ் டிப்போ முகாமையாளர் வீ.டி.பரூஸ் தெரிவித்தார்.

நேற்றைய இரவு நேர பஸ்களிடையே ஏற்பட்ட பிரச்சினையின்போதே இவ்வாறு முகாமையாளர் தெரிவித்தார். மூதுரில் இருந்து வரும் பஸ் வழமைபோல் அல்லாது நேற்றிரவு பத்து நிமிடங்களுக்கு முன்பு அதாவது 9.50 க்கு வருகை தந்ததனாலே இப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

01சம்பவ இடத்துக்கு கிண்ணியா பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிண்ணியா டிப்போ முகாமையாளருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னரே சுமூகமான தீர்வின் பின்னரே மூதூர் இரவு நேர பஸ் கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் மூதூர் டிப்போ முகாமையாளர் திரு நௌபீருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது கந்தளாய் பகுதியில் பாலம் ஒன்று புணரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதனாலேயே எமது பஸ் சேவைகள் கொழும்புக்கு கடந்த மூன்று மாதகாலமாக கிண்ணியா ஊடாக பயணிக்கிறது. இது உண்மையில் மானசீகமான பிரச்சினைதான் இதனை சரியான தீர்வினை கொண்டு சுமூகமாக தீர்ப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை பிராந்திய உயரதிகாரிகள் மூலமான தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இது தொடர்பில் கிண்ணியா டிப்போ முகாமையாளர் வீ.டி.பரூஸ் சம்பவ இடத்திலிருந்து ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

மூதுர் பஸ் கிண்ணியா ஊடாக இரவு நேர 10 மணிக்கு எமது பஸ் செல்லும் அதே நேரத்தில் வந்து கிண்ணியா பயணிகளை கொழும்புக்கு ஏற்றிச் செல்வதனால் நாளாந்தம் கிண்ணியா டிப்போவுக்கு கிடைக்கக் கூடிய பெருமளவான வருமானம் குறைவடைந்து செல்கிறது. இதனால் சக ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவில் பிரச்சினைகள் உள்ளது. இன்னும் சம்பள கொடுப்பனவில் பிரச்சினைகள் தொடர்ச்சியாக உள்ளது.

எனவே மூதூர் பஸ் இதனூடாக செல்வதாக இருந்தால் இரவில் 10.30 மணிக்கு செல்லலாம் அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றார். நேற்றைய மூதூர் இரவு நேர பஸ் கிண்ணியாவில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 45 நிமிடங்கள் தாமதித்து சென்றுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY