திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒரவர் உயிரிழப்பு

0
290

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் இன்று (27) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ பகுதியைச்சேர்ந்த கே.ராஐா திஸாநாயக்க (51வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது சில்லறை கடைக்கு பொருற்களை வாங்குவதற்காக ஹொரவ்பொத்தானை சென்று வருகை தந்து வீட்டிற்கு செல்வதற்காக வேண்டி வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த போது அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டியொன்று திருப்ப முற்பட்ட வேளை பிரதான வீதியால் வந்த லொறி முற்சக்கர வண்டியை மோதியதில் வீதியோரத்தில் நின்றவருடன் முற்சக்கர வண்டி மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய இரண்டு வாகன சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியதாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுு

received_1536285209741992

LEAVE A REPLY