தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கிறது இதனால் தான் ரூபா 2கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர் -அங்கஜன் எம்.பி

0
287

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கிறது இதனால் தான் ரூபா 2கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர் எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

அரசு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற சிறப்பு நிதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15பாராளுமன்ற உறுப்பினர்களும் 2கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர் அதே போல் கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அரசு சார்பில் வகித்த அதே பதவியை செல்வம் அடைக்கலநாதன் வகிக்கிறார் ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வை எதிர்கட்சியாக இருந்து முன்னெடுக்காமல் அரசுடன் இணைந்து சலுகைகளை பெற்றுவருகிறது எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கும் கூட்டமைப்பிற்கும் வழங்குகின்ற வாக்கும் ஒன்று தான் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்கடிக்க ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மாற்று தலைமையை உருவாக்க வேண்டும் இணைந்து செயற்பட நான் தயார் என அனைத்து கூட்டமைப்பு அதிருப்தி கட்சிகளுக்கும் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY