நான் அழிவுச்சத்தியம் செய்யத்தயார்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயாரா?

0
745

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

“நேற்று (27) சனிக்கிழமை இரவு காத்தான்குடியில் நடைபெற்ற ‘ஊழல்’ எனும் தலைப்பிலான கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நான் வீதி போடுவதற்கு கொந்தராத்து காரர்களிடம் கொமிஸன் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நான் வாங்கியிருந்தால் அவர் அதனை நிரூபிக்க வேண்டும். நிரூபிப்பதுடன் நான் அவரின் மேடைக்கு வருகின்றேன். அந்த மேடையில் அவர் சிப்லி பாறூக் வீதி போடுவதற்கு கொந்தராத்து காரர்களிடம் கொமிஸன் வாங்கினார் என அழிவுச்சத்தியம் செய்ய வேண்டும். நான் அவ்வாறில்லை என அழிவுச் சத்தியம் செய்வேன்” என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது தெடர்பாக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நான் அவரின் மேடைக்கு நான் செல்கின்றேன். அந்த மேடையில் அவர் சிப்லி பாறூக் நான் வீதி போடுவதற்கு கொந்தராத்து காரர்களிடம் கொமிஸன் வாங்கினார் என அழிவுச்சத்தியம் செய்ய வேண்டும். நான் அவ்வாறில்லை என அழிவுச் சத்தியம் செய்வேன்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் கொந்தராத்துக்காரர்களிடம் கொமிசன் வாங்கினார் என நான் பகிரங்கமாக அழிவுச்சத்தியம் செய்யத்தயாராகவுள்ளேன். அவர் அப்படி ஒரு சதமேனும் இதுவரை வாங்க வில்லை என அவர் அழிவுச் சத்தியம் செய்யத்தயாரா என நான் கேட்கின்றேன். அவர் விரும்பினால் அவரின் மேடைக்கு சென்று சத்தியம் செய்ய தயாராக இருக்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY