தொலைபேசி மூலம் பண மோசடி: தாய்க்கு விளக்கறியல் மகனுக்கு பிணை

0
270

(அப்துல்சலாம் யாசீம்)

ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் உதவிச்செயலாளர் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் நிறுவனத்தலைவர்கள் போன்று வெவ்வேறு நபர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை பெப்ரவரி 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வௌ்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து தாயும் சிறு வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை சிறுவயது மகனை ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறும் சிறுவர் தொடர்பான அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் திருகோணமலை சீனக்குடா கரடிப்பூவல் பகுதியைச்சேர்ந்த 44 வயதுடைய பெண்னொருவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணுடைய கணவர் சிறைக்கைதி எனவும் சிறைச்சாலைக்குள் தொலைபேசி பாவித்தே இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதுடன் தொலைபேசி பாவனை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுவத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY