எங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குவதா?: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

0
235

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹக்கானி போராளிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த குழுவுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கைபர் – பக்துங்கா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தின் ஸ்பீன் தால் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) இரண்டு ஏவுகணைகளை வீசின. இந்த அதிரடி தாக்குதலில் ஹக்கானி இயக்கத்தின் மூத்த தளபதி ஹவாரி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கியிருந்த முகாமின்மீது அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்தது போன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள கூட்டுறவின் ஊக்கத்தை குறைத்துவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Maalaimalar)

LEAVE A REPLY