ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு முஸ்லிம்களை அவர்களின் அரசியல் அடிமைகளாகவே பாவித்து வந்துள்ளனர்

0
314

பொதுஜன பெரமுன வேட்பாளர் செனானி சமரநாயக்க

தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்பு முஸ்லிம்களுக்கு அக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்து மலசலகூடம் என கொழுப்பு மாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர் செனானி சமரநாயக குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மத்திய கொழும்பு முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் அங்கு அவர்களிடம் கருத்து வெளியிடுகையில் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்,

மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என அக்கட்சி காரர்கள் பெருமையாக கூறுவார்கள் ஆனால் அக்கட்சி அம்மக்களுக்கு செய்துள்ள சேவைகள் என எதுவும் இல்லை.

தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்பு முஸ்லிம்களுக்கு அக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்து மலசலகூடம்,நான் அறிந்தவரை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கொழும்பு மத்தியில் வீட்டுபிரச்சினை பாரிய அளவில் உள்ளது.

ஒரு அறையில் மூன்று குடும்பங்கள் வாழும் அகலமும் இங்கு இடம்பெறுகிறது.அதேபோல அரசாங்க பாடசாலைகளில் அடைப்படை வசதிகள் மிக அரிதாக காணப்படுவதால் கூலித்தொழிலாயின் பிள்ளைகளும் சர்வதேச பாடசாலைகளில் பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டிய நிலையே உள்ளது.

உண்மையில் கொழும்பு முஸ்லிம்களை ஐக்கிய தேசிய கட்சி வாக்களுக்கும் இயந்திரமாக பயன்படுத்திவருகின்றனர்.இந்த நிலை மாறவேண்டும்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆட்சியில் சில முஸ்லிம் அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஊடாக பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார்கள்.

வடக்கில் கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக அங்குள்ள முஸ்லிம்கள் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை பெற்றுக்கொண்டார்கள் ஆனால் வடக்கு கிழக்குக் வெளியே குறிப்பாக கொழும்பு முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அடிமைகளாக இருந்து பெற்றுக்கொண்டது எதுவுமே இல்லை என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY