ஓட்டமாவடி, மீராவோடையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு! நோயாளர்களின் சிகிச்சை தொடர்பான விஷேட கலந்துரையாடல்

0
87

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றனர். இந்நோய் தாக்கத்தினால் வயதானவர்களும், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்றுவருகின்றனர்.

குறித்த நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெருவதற்கு பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டு வருவதன் காரணத்தால் அவர்கள் விடயத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்வது, அவர்களுக்கான பங்களிப்புக்களை எவ்வகையில் செய்வது பற்றிய விஷேட கலந்துரையாடலொன்று மீராவோடை அல் ஹிதாய மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் (19) ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் பிரதேசத்திலுள்ள பலர் கலந்துகொண்டு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இச்சந்திப்பில் குறித்த நோயாளர்களின் மேலதிக சிகிச்சைகளை தொடர்ச்சியாக செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் பிரதேச மக்களுக்கு சிறுநீரக நோய் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்குகள் செய்வதற்குமாக குழுவொன்று நியமிக்கப்பட்டு விரைவில் அதற்கான முன்னெடுப்புக்களையும் ஏற்பாடுகளையும் செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20180119_211802

LEAVE A REPLY