ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயம்; பிக்கப் சாரதி கைது

0
96

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு 22.01.2018 இடம்பெற்ற இவ்விபத்தில் பிக்கப் வாகனம் பயணிகள் முச்சக்கர வண்டியுடன் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டிச் சாரதியும் அதில் பயணம் செய்த பயணியும் படுகாயமடைந்தனர்.

இதனைடுத்து பிக்கப் வாகனத்தைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பிக்கப் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY