பள்ளிவாயலினால் வழங்கப்படும் உதவிகளை தரமாட்டோம்: தங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் தெரிவிப்பு

0
214

(விஷேட நிருபர்)

பள்ளிவாயலினால் வழங்கப்படும் உதவிகளை தரமாட்டோம் எனக் கூறி முஸ்லிம் பெண் வேட்பாளர்களை சிலர் அச்சுறுத்துவதாக சில முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

விழுது நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் திருமதி இந்துமதி ஹரிகரன் தாமோதரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் சில பெண் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுதாக பெண் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

இதன் போது முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் என்னுடன் சில பெண் ஆதாரவாளர்களை அழைத்துக் கொண்டு வீடு வீடாகச் செல்லும் போது உங்களுக்கு பள்ளிவாயல்களினால் வழங்கப்படும் உதவிகளை நாம் தர மாட்டோம் நீங்கள் தேர்தலில் இறங்க கூடாது என அச்சுறுத்துவதுடன் ஆதரவுக்காக வரும் ஏனைய பெண்களையும் இவர்கள் வரவிடாமல் தடுக்கின்றனர்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருவதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

சில பெண் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சில அசௌகரியங்களும் ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தொலை பேசியூடாக சில பெண் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் வருவதாகவும் பெண்களுக்கு இந்த தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதற்கு வேற வேலை இல்லையா எனவும் கேட்கின்றனர்.

சில பெண் வேட்பாளர்களை சில அரசியல் கட்சிகள் அவர்களுக்கு தெரியாத அவர்கள் அறிமுகமில்லாத வட்டாரங்களுக்கு வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் அதனால் அங்கு பிரச்சாரத்திற்கு செல்வதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சில அரசாங்க ஊழியர்களின் அச்சுறுத்தல்களும் தமக்கு அவ்வப்போது ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதே நேரம் சில பெண் வேட்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளுமில்லை நாம் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

எமக்கு ஆண் பெண் என்ற வேறு பாடின்றி அனைவரும் ஆதரவு தருகின்றனர். அதனால் நாம் பிரச்சாரப்பணிகளை சுதந்திரமாக மேற் கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

நாங்கள் வெற்றி பெற்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் போது அனைவருக்கும் சேவையாற்று வோம் வேறு பாடின்றி சேவையாற்றுவோம் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விழுது நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் கிழக்கின் அகல் நிறுவனப்பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC03983 DSC03978

LEAVE A REPLY