பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் சிரமம்

0
389

(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு, திருமண சான்றிதழ்களை பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளை பல்வேறு வகையில் துரிதப் படுத்தி வருகின்றது.

அந்த வகையில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை அரை மணி நேரத்தில் வழங்கும் திட்டங்களும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் கிண்ணியா பிரதேச செயலகத்தில் காலையில் விண்ணப்பம் கொடுத்தால் மாலையில் வழங்கப்படும் நிலையே இன்னும் நடைமுறையில் உள்ளது.

பதிவாளர் பிரிவுக்கு என தனியான உத்தியோகத்தர்கள் இருப்பதால் வீண் தாமதங்களைக் குறைத்து பணியை துரிதப் படுத்தலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தகவல்கள் பூரணமாகவுள்ள சகல விண்ணப்பங்களின் சான்றிதழ் பிரதிகளையும் துரிதமாக வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்ளலாமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் கிண்ணியா பிரதேச புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY