நகர சபையின் பணியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

0
328

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

கிண்ணியா நகர சபைக்கு சிறந்த பணியினை வழங்கிய ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (19) வெள்ளிக் கிழமை கிண்ணியா நகர சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய என்.எம். நௌபீஸ் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது சிறந்த திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு, சிறந்த வடிகான் துப்பரவு செயற்பாடு, சிறந்த மின்னிணைப்பு செயற்பாடு, அதிக விடுமுறை இன்றி வேலை செய்தமை, சிறந்த மேற்பார்வை செய்தமை, சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துவம், சிறந்த பசளை தயாரிப்பு முகாமைத்துவம், சிறந்த வாகன பராமரிப்பு போன்றவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.

மேலும் செயலாளரினால் ஊழியர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும், கேட்டுக் கொள்ளப்பட்டது வினைத்திறன் மிக்க சேவைகள் பாராட்டு விழா வரலாற்றில் இதுவே முதற் தடவையாகவும் கிண்ணியா நகர சபையில் கருதப்படுகிறது.

மக்களுக்கான சிறந்த முன்னெடுப்புக்கள் மக்களின் சிறந்த சுகாதார மேம்பாடுகளை மேன்மைப்படுத்த அளப்பெரிய பங்காகும் உங்களது சேவை தொடர்ந்தும் மக்களுக்கு எனது வழிகாட்டலின் கீழ் செயற்படுவீர்கள் என நம்புகிறோம் எனவும் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தனது உரையின்போது தெரிவித்தார்.

FB_IMG_1516365835066 FB_IMG_1516365827853 FB_IMG_1516365812471 FB_IMG_1516365802924 FB_IMG_1516365776108

LEAVE A REPLY