திருகோணமலையில் சுற்றிவளைப்பு; 19 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

0
225

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சுற்றிவளைப்பின் போது 19 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இன்று (19) திருகொணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை விலையை விட கூடுதலான விலைக்கு விற்றமை, காலாவதியான பொருற்களை விற்பனை செய்தமை, குறியீடு இல்லாத பொருற்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை நகரம் 04ம் கட்டை உவர்மலை அனுராதபுரசந்தி போன்ற பகுதிகளை சுற்றிவளைத்த போதே இக்குற்றச்சாட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY