முசலிப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அணியில் சேர்வோம்: வேட்பாளர் முகுசீன் றைசுதீன்

0
170

(எ.எம்.றிசாத்)

யுத்தம் முடிந்து மீள்குடியேறி வரும் எமது பிரதேச மக்களின் பிரச்சனைகளை தீர்க்க சரியான தலைமையாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இருக்கிறார்.

எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது அதனைக்கொண்டு வேலைத்திட்டங்களை செய்வதற்கு எங்கள் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுகிறது இரண்டு வருடங்களுக்குள் எமது பிரதேசத்தின் வீட்டுப்பிரச்சினை, நீர்ப்பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை, அதேபோல் இன்னும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இதற்கு பலமான அணி பிரதேசத்தில் தேவைப்படுகிறது. அந்த பலமான அணியை தீர்மானிக்கும் பொருப்பு எமது பிரதேச மக்களாகிய உங்களிடம் உள்ளது.சிந்தித்து செயற்பட வேண்டியது உங்கள் கடமையாக உள்ளது.

நான் அரசியலுக்கு வர விரும்ப வில்லை. ஆனால் அமைச்சர் என்னை தேர்தல் களத்தில் இறங்க சொன்னார். இந்த மக்களின் பிரச்சினைகள் கஷ்டங்களை தெரிந்தவன் நீ. இந்த மக்களின் அபிவிருத்தியை அந்த மக்களின் எதிர்பார்ப்பை என்னோடு இணைந்து உன்னால் செய்துகொடுக்க முடியும். இந்த பிரதேசத்துக்கு உதவ முடியும். உனக்கு களத்தில் நின்று செய்யும் திறனும் திறமையும் உள்ளது. ஆகவே நீ அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்று பணித்தார். இந்த அழைப்பை என்னால் தட்ட முடியவில்லை நான் அரசியலுக்கு வந்தேன்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனது நண்பர் தாய்க்கு ஒரு நல்ல பிள்ளையாக மனைவிக்கு நல்ல கணவனாக நாட்டு மக்களுக்கு நல்ல தலைமையாக நல்ல அரசியல்வாதியாக மக்களுக்கு நல்ல சேவகனாக இருக்கிறார்.இப்படி நல்ல பண்புகளை கொண்ட நல்ல தலைமையோடு தான் நாம் இணைந்திருக்கின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இந்த வன்னி மாவட்டத்தில் அதிகப்படியான சேவையை செய்யும் கட்சியாக மட்டும் அல்லாமல் மக்களோடு இணைந்து பயணிக்கு கட்சியாகும். இந்த கட்சி மூலம்தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் ஏனைய கட்சிகள் மக்களை மடயர்களாக்கி ஏதையும் செய்யாமல் வாக்குறுதிகளை மட்டும் சொல்லிவிட்டு செல்லும் கட்சியாக காணப்படுகிறது இந்த காட்சிகளை நம்பி எந்த பலனும் இல்லை.

மக்களே சிந்தியுங்கள் சரியான முடிவை எடுங்கள் எங்கள் அணியை பலப்படுத்துங்கள் என்று குறிப்பிட்டார்.

26733910_179895552616985_5090483487940483985_n

LEAVE A REPLY