ஓட்டமாவடியில் மீண்டும் யானையின் அட்டகாசம்

0
203

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடிக் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

கிரான் முருகன்தீவு காட்டுப் பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து ஓட்டமாவடி உசன்போடி ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலைக்கு நேற்று (17) புதன்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அரிசி ஆலையில் இருந்த நெல்களை சேதப்படுத்தியதுடன், வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

அரிசி ஆலையின் காவலாளி யானையை கண்டு எழுப்பிய சத்தத்தில் அயலவர்களின் உதவியுடன் யானைகள் துரத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (12) யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் குடியிருப்புக்குள் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் இருமுறை யானைகள் நுழைந்தமையினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர். இதனை உடனடியாக தடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

01 02

LEAVE A REPLY