எனக்கு வாக்களியுங்கள்

0
231

தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கவேண்டும்………?

எனக்கும் எனது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள்

நாங்கள் சென்ற ஆண்டுகளில் செய்த சேவைகள் தான் இந்த கீழ்வரும் பட்டியல்:

1. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தோம்

2. ஒலிவில் துறைமுகத்தை நிர்மாணித்தோம்

3. கப்பல்துறைமுக அமைச்சராக இருந்து பல்லாயிரம் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தோம்,

4. எமது கட்சியை மொத்த இலங்கை முஸ்லிம்களினதும் கட்சியாக நிறுவி நாட்டின் அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக மாற்றி அமைத்தோம்,

5. உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தொம்,

6. மக்களை காட்டி எந்த அரசிலும் கைநீட்டி கோடிகள் பெறாத தூய்மையான கட்சியாக திகழச்செய்தோம்,

7. எம் சமூகத்தின் உரிமை விட்டுக்கொடுக்காது அதேநேரம் சிங்கள, தமிழ் சமூகத்துடன் நல் உறவை பேனிவந்தோம்

8. வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும், பிரிக்கப்பட்டே இருக்க வேண்டும் என்பதே எமது பிரச்சாரமாக இருந்தது,

9. அரசின் எல்லா நகர்விலும் முஸ்லிம்களின் விகிதாசாரம் பேணப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருதுவந்திருக்கிறோம்.

இப்படி நிறைய சொல்லுவோம்.

தலைவர் அஷ்ரப் (M.H.M. Ashraff) இப்படித்தான் சொல்லி தேர்தலில் வாக்குச் சேர்த்திருப்பார், ஆனால் நம்முடைய‌ தற்போதைய வேற்பாளர்கள் எப்படி கேவலமாக மேடைப் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

மக்களே உக்ஷார்….!

(இஸ்ஸதீன் றிழ்வான்)

LEAVE A REPLY