தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த தேசிய மாநாடும் நினைவு மலர் வெளியீடும்-2018

0
409

இலங்கை கல்வி வரலாற்றில் நான்கு தசாப்தங்களாக தொடர் சாதனை படைத்து வரும் எமது கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ‘தாஇரதுஸ் ஸலபிய்யீன் ‘ மூன்றாவது தேசிய மாநாடு மற்றும் நினைவு மலர் வெளியீடு நிகழ்வுக்காக தயாராகியுள்ளது.

இந்நிகழ்வு, கலாபீடத்தின் பணிப்பாளரும் ஜமாத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) அவர்களின் போஷனையின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக அறபு, இஸ்லாமிய நாகரீகம் துறைத்தலைவர் கலாநிதி எம். இஸட்.எம். நபீல் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதில், பிரதம அதிதியாக கௌரவ உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவும் சவூதி அரேபியா மற்றும் குவைத் நாட்டு உயர்ஸ்தானிகர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

காலம்: 28.01.2018
நேரம்: காலை 9.00 மணியிலிருந்து
இடம்: Oakray Regency Hotel, Kandy.

ஏற்பாட்டுக் குழு

LEAVE A REPLY