மட்டக்களப்பில் 9255 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

0
154

(விஷேட நிருபர்)

தபால் மூலம் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 9820 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 565 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 9255 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் உரிய திணைக்களங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் பொலிஸ் மற்றும் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்யாதோரின் விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு எதிர் வரும் 22.1.2018 அன்று மட்டக்களப்பு கச்சேரி மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் படையினர் பொலிசார் ஆகியோருக்கு இடம் பெறவுள்ளது.

இம் மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தபால் மூலமான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY