புன்னைக்குடாவில் காணாமல் போன தாய் கொழும்பில் மீட்பு

0
216

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை (11.01.2018) தொடக்கம் காணாமல் போயிருந்த 60 வயதுடைய தமது தாய் திங்கட்கிழமை (15) இரவு கொழும்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமது தாய் காணாமல் போனது பற்றி இணைய தளம் உட்பட முகநூல்களிலும் தகவல் பரிமாறப்பட்டதையடுத்து உடனடியாக அவர் கொழும்பில் ஒரு வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அவ்வீட்டார் தகவல் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்தே தமது தாயை கண்டு பிடித்து அழைத்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

புன்னைக்குடா வீதியை அண்டி வாழும் சுமத்திரா தங்கவேல் (வயது 60) என்ற 5 பிள்ளைகளின் தாய் காணாமல் போனது பற்றி அவரது பிள்ளைகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை 15.01.2018 முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY