மு.காவின் கூட்டங்களில் எல்லாம் வெளியூர் மக்கள் அலை மோதல்

0
399

இன்று மு.காவின் செல்வாக்கு மிகவும் சரிந்துள்ளமையை மு.காவினரே அறிந்து கொண்டுள்ளனர். இதனை வெளியில் தெரியாமல் மறைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் பிரதானமான ஒன்று தான், வெளியூர் மக்களை குறித்த கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வதாகும். அடுத்ததாக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஊடக செயற்பாடுகளை முன்னெடுப்பதாகும்.

இது மிகத் தெளிவாக பாலமுனை கூட்டத்தில் வெளிப்பட்டிருந்தது. அங்கு கலந்து கொண்டிருந்தவர்கள் தலைக்கவசங்களோடு கலந்து கொண்டிருந்தமை, தெளிவாக வீடியோக்கள் மூலம் வெளிப்பட்டிருந்தது. அதுவும் பிரதான மேடைக்கு முன்னரே தலைக்கவசம் அணிந்தவர்களே உள்ளனர். பாலமுனை போன்ற ஊர்களில், ஊருக்குள் பிரயாணம் செய்யும் போது தலைக்கவசங்களின் பாவனை மிகக் குறைவு. உள்ளூரில் நடக்கும் குறித்த கூட்டத்துக்கு தலைக்கவசத்தோடு வருகிறார்கள் என்றால், அது நிச்சயம் வெளியூர் மக்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதை அங்குள்ள சிறு பிள்ளையும் அறியும்.

அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருந்த மு.காவின் சம்மாந்துறை கூட்டத்தில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் என்ற விம்பம் காட்டப்படுகிறது. சரியாக ஆராய்ந்து பார்த்தால் தான், அங்கு குழுமி இருந்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அங்கு பல வெளியூரார்களும் குழுமியிருந்ததாக அக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிடுகின்றனர். அது மாத்திரமன்றி அமைச்சர் ஹக்கீம் பேச ஆரம்பிக்கும் போது வழமைக்கு மாறாக மக்கள் கலைந்ததாகவும், அமைச்சர் ஹக்கீம் மிகக் குறுகிய நேரமே பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தான் அமைச்சர் ஹக்கீமின் இன்றைய நிலை..! சந்தி சிரித்துவிடும் என்பதற்காக இப்படியானதொரு ஏற்பாடு இருக்கலாம். இவர்களது முழு அம்பாறை மாவட்ட ஆதரவு மக்களின் எண்ணிகையை, ஒரு கூட்டட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் எண்ணிகையை கணக்கிட்டு அறிந்து கொள்ளலாம்.

தற்போது மு.காவினர் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டு கூட்டங்கள் ஒளிப்பதிவு செய்கின்றனர். அந்த கமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்தால், சிறிய கூட்டமும் பெருங் கூட்டமாக காட்சி தரும். இன்று இந்தளவு ஊடகங்களை முஸ்லிம் அரசியல் வாதிகள் யாருமே பயன்படுத்தவில்லை எனலாம். அமைச்சர் றிஷாதுடைய ஊடகமானது மிகக் குறுகிய வளங்களுடன் சிறப்பாக இயங்குகிறது. இந்தளவு தொழில் நுட்பம் அங்கில்லை. சிறந்த தரமிக்க பொருள் எப்படியாவது விற்பனையாகும். தரமற்ற பொருளுக்குத் தானே ஊடக விளம்பரம் தேவை. இத் தேர்தலில் மு.காவினர் ஊடக மாயையை தோற்றுவிப்பதில் மிகவும் அக்கறை காட்டுவதாகவும் அறிய முடிகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

26856792_933491966818596_1536239384_n 26971873_933492156818577_1703991475_o

LEAVE A REPLY