மொறவெவ பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பேன்! முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் தெரிவிப்பு!

0
214

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச சபையை ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெருமானால் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் தெரிவித்தார்.

ரொட்டவெவ கிராமத்திலுள்ள கட்சி ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக தௌிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் இம்முறை மொறவெவ பிரதேச சபைக்கு அதிக வாக்குகளை வழங்கி அபிவிருத்தி திட்டங்களை அதிகரிப்பதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மொறவெவ பிரதேச சபையில் உறுப்பினராக கடந்த வருடம் இருந்த போது எமது ரொட்டவெவ கிராமத்திற்கு குடிநீர் வசதிகள் மையவாடி அபிவிருத்தி பணிகள் பொது கட்டிடங்கள் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என பல சேவைகளை செய்ததாகவும் தற்போது தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் மாற்று கட்சியினர் போலி நாடகங்களை ஆடி வருவதாகவும் தனக்கு அதிக வாக்குகளை ரொட்டவெவ கிராம மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் மொறவெவ பிரதேச சபைக்கு மூன்றிற்கும் மேற்பட்ட தடவை மக்கள் என்னை தெரிவு செய்தது போன்று இம்முறையும் தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் குறிப்பிட்டார்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய சமூக அபிவிருத்திகளை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கும் இடையில் நிறுத்தப்பட்ட கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் நாங்கள் மொறவெவ பிரதேச சபையை எமது ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.

இதற்காக வேண்டி மொறவெவ பிரதேச மக்களும் ரொட்டவெவ கிராம மக்களும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருனத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY