திருகோணமலை நகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கை

0
116

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார தொழிலாளர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை திருகோணமலை நகர சபை போன்ற உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்கள் நாளுக்கு நாள் சுகவீனமுற்று வருவதாகவும் சுகாதாரம் சிறந்த முறையில் பேணப்படாமையினாலேயே நோய்கள் வருவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் நகர சபை சுகாதார தொழிலாளர்களின் சுகாதாரம் பேணப்படும் விதத்தில் ஊழியர்களுக்கு கையுரை மூக்குக்கவசம் உயரமான பாதணிகள் என சுகாதார அங்கிகள் வழங்கப்படுவதுடன் சுகாதாரம் பற்றிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை மாதத்தில் ஒரு முறையாவது சுகாதார கிளினிக்குகளை மேற்கொண்டு அவர்களுடைய சுகாதாரம் பற்றி சோதனைகளை மேற்கொண்ட வேண்டுமெடனவும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே திருகோணமலை நகர சபை மற்றும் பட்டனமும் சூழலும் பிரதேச சபைகள் சுகாதார தொழிலாழிகள் விடயத்தில் அக்கறை காட்டி சுகாதார தொழிலாளர்களுக்குறிய பாதுகாப்பு அங்கிகளை வழங்கி தங்களது குடும்பங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுகாதார தொழிலாளர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY