சல்மா ஹம்சாவின் சவாலை ஏற்றுக் கொள்கின்றேன்; பொது மேடைக்கு வந்தால் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்: பிர்தௌஸ் நழீமி

0
497

சல்மா ஹம்சாவை பொது மேடைக்கு வருமாறு பிர்தௌஸ் நழீமி அழைப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

“சல்மா ஹம்ஸா பொது மேடை ஒன்றுக்கு வருவாராக இருந்தால் நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின தேசிய அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஜாமியுழ்ழாபிரீன் வட்டார வேட்பாளருமான எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

சல்மா ஹம்சா, பிர்தௌஸ் நழீமி அவர்களுக்கு விடுத்துள்ள சவால் தொடர்பில் பிர்தௌஸ் நழீமியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நான் மௌலானா வட்டாரத்தில் நடைபெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் சல்மா ஹம்சா என்னை நிரூபிக்க வருமாறு சவால் விடுத்திருந்தார்.

நான் அதற்கு ஒரு சில மணித்தியாலயங்களுக்கு முன்னர் வெளியூருக்கு சென்று விட்டேன்.

நான் வெளியூரில் நின்று கொண்டிருந்த போது பதுறியா முபீன் என்பவர் எனக்கு தொலை பேசியில் சல்மா ஹம்சாவின் சவாலை கூறினார்.

நான் அவரிடம் கூறினேன், நான் தற்போது வெளியூரில் நிறிகின்றேன் என்று.

ஒரு பொது மேடைக்கு சல்மாவை வரச் சொல்லுங்கள், அல்லது அழைத்து வாருங்கள். மக்கள் முன்னிலையில் நானும் அவையும் பேசுவோம் எனக் கூறினேன். ஆதாரத்தை மக்கள் முன்நிலையில் நிரூபிக்கின்றேன் எனவும் கூறினேன்.

இன்று (14) ஞாயிற்றுக்கிழமை நண்பகள் வரை அந்த பதுறியா முபீன் பதில் கூற வில்லை.

மீண்டும் கூறுகின்றேன். நடு நிலையாளர்கள் யாராவது முன் வந்து பகிரங்கமான ஒரு மேடையை ஏற்பாடு செய்து, மக்கள் முன்னிலையில் சல்மா ஹம்சா வந்தால், நான் அவவுடன் பேசுவதற்கும் நான் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கும் தயாராக இருக்கின்றேன்.

இதனை சவாலாகவும் சல்மா ஹம்சாவுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன். என்னிடம் ஆதார மில்லாமல் நான் பேசவில்லை.

முடிந்தால் சல்மா ஹம்சா பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY