மட்டக்களப்பு புதூர் பகுதி வேட்பாளரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது

0
71

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புதூர் நகர வட்டாரத்திற்காக போட்டியிடும் வேட்பாளர் தமிழேந்தி என அழைக்கப்படும் இரா.அசோக் என்பவரின் அலுவலக பெயர்ப்பலகையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் மட்டக்களப்பு புதூர் சந்தியிலுள்ளது. இவரின் அலுவலகத்தின் பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

DSC03728

LEAVE A REPLY