நேபாளத்தில் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்கள் கைது

0
114

நேபாளம் நாட்டில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

நேபாளம் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள பிம்டுட்டா நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை அச்சிட்டதாக இந்தியாவை சேர்ந்த பல்பிர் சிங்(22), கிருஷ்ணா சிங்(20) ஆகியோரை சிறப்புப்படை போலீசார் கடந்த 11-ம் தேதி கைது செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நேபாள நாட்டு கள்ளநோட்டுகளை அச்சிட்டு அனுப்பிவந்த இவர்கள் இருவரும் உள்நாட்டில் வந்து தொழில் செய்ய முயற்சித்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தற்போது பிடிப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY