கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு இனவாத உணர்வுகளை ஊட்டி வாக்குகளைப் பெற்று மொத்த வியாபாரம் நடாத்தும் மு. கா நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்.உதுமாலெப்பை.

0
156

(எம்.ஜே.எம்.சஜீத்)

ஒவ்வொரு தேர்தலிலும் கிழக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் வந்து இனவாத உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளைப் பெற்று மொத்த வியாபாரம் நடாத்தும் முஸ்லிம் காங்கிரஸிக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும் என பொத்துவில் பிரதேச சபையில் சிறி லங்கா சுதந்திர கட்சியில் தேசிய காங்கிரஸ் சார்பில் நகர வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் தொழில் அதிபர் அன்சாரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்….

கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் துணி ஒன்ற கட்டி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தினாலும் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலமை மாறி, தொடர்ந்தும் ஏமாற்றி வரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை இன்று கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.

மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள உச்ச பெறுமதிமிக்க வாக்குகளை பாவிக்கும் போது நன்கு சிந்தித்து இறைபக்தி, சமூக உணர்வு வாக்களிக்கும் மக்களுக்கு அர்பபணிப்போடு செயற்படும் ஆளுமை, பொறுமையுடன் நமது பிரதேசங்களில் வாழும் சகோதர இனங்களின் உணர்வுகளை மதித்து செயற்படும் பக்குவங்களை பரீசிலனை செய்து வாக்களிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பொத்துவில் பிரதேச மக்களுக்கு உள்ளது.

இதுவரை பொத்துவில் பிரதேச மக்களின் பெறும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு தேர்தல்களில் பெற்றுச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் நமது பொத்துவில் பிரதேச மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படுத்திய திட்டங்கள் எதுவும் இல்லாத நிலமை தொடர்கிறது. நடைபெறவுள்ள பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திர கட்சியும், தேசிய காங்கிரஸிம் இணைந்து மக்களுக்கு அர்ப்பணிப்பாக பணி புரியும் வேட்பாளர்களை கை சின்னத்தில் நிறுத்தியுள்ளது. இவர்களை வெற்றியடையச் செய்வதன் ஊடாக பொத்துவில் பிரதேச மக்களின் பாதுகாவலர்களாகவும், பொத்துவில் பிரதேசத்தின் நலன்களை நன்கு திட்டமிட்ட முறையில் செயற்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவும் நானும் இணைந்து தேசிய காங்கிரஸிடம் அதிகாரம் இருந்த காலமெல்லாம் பொத்துவில் பிரதேச மக்களின் வாக்குகளை எதிர்பார்க்காது எதிர்கால சந்ததிகளின் நலனை முன்னிட்டு எதிர்கால சந்ததியினர் நன்மை பெறும் வகையில் அபிவிருதத்தி திட்டங்களை எங்களால் முடிந்தளவு இப்பிரதேச மக்களுக்காக செயற்படுத்தியதுடன் இப்பிரதேச மக்களை நோக்கி அவ்வப்போது பல முனைகளில் இனவாதச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் இம் மக்களின் பாதுகாவலர்களாக செயற்படுவதற்கு இறைவன் எங்களுக்கு சந்தர்பத்தினை வழங்கியிருந்தான்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்களாக நீண்ட காலமாக செயற்பட்ட முக்கிய பிரமுகர்கள் தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களாகவும் பொத்துவில் பிரதேசத்தின் அரசியல் மாற்றத்திற்கான செயற்பாடுகளுக்கும் வழங்கி வரும் பங்களிப்புகளை இப்பிரதேச மக்களை எப்போதும் நேசிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்கூட்டத்தில் வேட்பாளர்களான பொத்துவில் ஜூம்மா பள்ளி வாசல் தலைவரும், ஒய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளருமான அல் ஹாஜ் சுபையிர், தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்கான் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

LEAVE A REPLY