ரயிலில் மோதுண்டு 64 வயது சபூர் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
212

(அப்துல்சலாம் யாசீம்)

கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் இன்று (13) பிற்பகல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் தாயிப்நகர் பகுதியைச்சேர்ந்த அலியார் முகம்மட் சபூர் (அறுபத்திநான்கு வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது ரயில் கடவையில் காவலாளி கடமையில் இருக்கவில்லையெனவும் வழமை போல் அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ரயில் வந்ததை அவதானிக்காத நிலையில் ரயிலில் மோதியதாகவும் ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY