அஸ்ரப்

0
356

Mohamed Nizous

கட்சி வளர்த்தெடுத்து
வெச்சவர சுமந்த ஹெலி
பச்ச மர மலையில
விழுந்ததென்னு சொன்னாக
விழுந் தது ஏன் என்று
விளங்கயில்ல கண்ணாத்தா

பட்டி தொட்டி எல்லாமே கட்சி கட்டிக் காத்தவரு
முட்டி விழுந்து இறந்தார் என்று சொன்னாக
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு பலரும் அத ஒத்துக்கல

பெற்ற கருப்பெட்டிய பிறகு வந்த அறிக்கைகள
கட்டி அதை மூலையில போட்டாக
கட்டுக் கதை எத்தனையோ கட்டுக் கதை
அதை மொத்தமாக நம்ம சனம் ஒத்துக்கல்ல

LEAVE A REPLY