நூல்களை அதிகம் தேடித் தேடி வாசிப்பதால் எத்த சவால்களையும் முறியடிக்கலாம் எஸ்.சுதாகரன்

0
233

ஹஸ்பர் ஏ ஹலீம்)

எந்தவிதமான சவால்களோ பிரச்சினைகளோ ஏற்படுகின்றபோது அதனை இலகுவாக தீர்ப்பதற்கான மனதைரியத்துடனான சிந்தனையை வெளிக்காட்டுவதற்கு அதிகமான புத்தகங்களை தேடித் தேடி வாசிப்பதனால் அதனை முறியடிக்கலாம் என வியாழக் கிழமை (04) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா நகர சபை ஏற்பாட்டில்நூலகங்களுக்கான நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வாறான சிறந்த முன்னெடுப்புக்களாலும் நிருவாக சேவையைச் சேர்ந்தவரும் இளைஞருமான கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் ஊடான முயற்சிகள் இவ்வாறான நூல்களை கொள்வனவு செய்து கிண்ணியாவில் மாணவர்களினதும் வாசகர்களினதும் கல்வித் திட்டங்களை அதிகரிப்பதென்பது அவருடைய பாரிய முயற்சியாக பார்க்கப்படவேண்டும்.

நகர சபைகள் ஆற்றவேண்டிய பணிகளை திறம்பட செய்யும் அன்றைய சபையினர் இருக்கும் தருணங்களை விடவும் தனது நகர சபை ஊழியர்களின் முயற்சினால் இவ்வாறான நூல்களை மேலும் வழங்கி ஊக்குவிப்பதென்பது பிரதேச அபிவிருத்திக்கு மாத்திரமல்ல தேசிய மட்டத்திலூம் கல்வியின் விருத்தியில் அது செல்வாக்குச் செலுத்துகிறது.

இன்றைய புதிய கல்வித் திட்டங்களுக்கு ஏற்றவாறு பாடப் புத்தகங்கள் ஊட்பட பல நூல்கள் வழங்கப்படுவது அனைத்து வாசகர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.அதிகமான புத்தகங்களை தேடிப் படிப்பதன் ஊடாக அறிவுப் பசியை போக்கிக் கொள்ள முடியும் பொழுது போக்குகளை தங்களது நூலகங்களில் கழியுங்கள் அதிகமான நூல்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் உரிய நூல்கள் இல்லாதவிடத்து நூலகருக்கு சொல்லுங்கள் அதை நாங்கள் கொள்வனவு செய்து தருவதற்கு தயாராக இருக்கிறோம் எதிர்காலத்தில் கல்விக்கும் நூல்களின் கொள்வனவிற்கும் அதிக முதலீடுகளை செய்யவுள்ளோம்.

இன்றைய சிறுவர்களாக இருக்கும் சிறார்களே நாளைய தலைவர்களாக மாறவிருக்கின்றார்கள் .அண்மைய நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவ் நிகழ்வில் கூட முக்கிய கடமைகளில் இஸ்லாத்தில் தொழுகை காணப்படுவது போல அதற்குச் சமமாக கல்வியும் விளங்குகின்றது இதற்கு அரபியில் இக்ரக என்று கூறுவார்கள் ஓதுவீராக அல்லது கற்பீராக எனவும் பொருள்படுகிறது இதனை இஸ்லாமிய மதம் தெளிவாக கூறுகின்றது இதைத்தான் இஸ்லாமிய நண்பர்களும் செயற்படுகின்றமையையும் காண்கிறோம் இவ்வாறான கல்விக்கான முக்கிய திட்டங்களில் நூல்களை அதிகம் வாங்கிப் படியுங்கள் வீடுகளில் வாசித்து முடித்த நூல்களை நூலகங்களுக்கு பரிசாகவும் வழங்கலாம் இதனால் பிரச்சினைக்கான தெளிவான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்புதிய சிந்தனை புதிய கண்டு பிடிப்புக்களையும் அதிக நூல்கள் வாசிப்பதன் ஊடாக எம்மால் இலகுவாக அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும்.நூல்களை வாசிப்பதனால் மனிதன் பூரணத்துவம் அடைகிறான் எனவேதான் நூல்களை வாசிப்பதன் ஊடாக அறிவை விருத்தி செய்து வாழ்க்கையின் நல்லதொரு வழிகாட்டலுக்கும் வழிகோலாக அமைகின்றது.அனுபவரீதியாகவூம் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்ப்க்கள் நூல்களை வாசிப்பதன் மூலம் தங்களை விருத்திக்கு இட்டுச் செல்லாம் எனது மனைவியும் ஒரு நூலகர் என்ற வகையில் இதனை மேலும் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 20000 ஆயிரம் ரூபாவுக்கு நூல்களை கொள்வனவு செய்வோம்.

கடந்த மாதமளவில் எனது அலுவலகத்தில் நூல்கள் விற்பனையின்போது 16000 ரூபாவுக்கு நூல்கள் கொள்வனவு செய்துள்ளோம் இவ்வாறாக நூல்களின் கொள்வனவிற்கும் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளோம் நகர சபைகளின் சபையினர் ஆட்சிக்காலத்திலும் விட சாதாரண தருணங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.உங்களது பிரதேசம் அபிவிருத்தி கண்டு வருகிறது தற்போதைய நகர சபையின் செயலாளர் நௌபீஸ் பதவியேற்று ஒன்றரை மாத காலமை கழிகின்றது இவ்வாறாக மக்களுடைய ஒத்துழைப்புக்களுடனான பிரதேச அபிவிருத்தி மேலும் கிடைப்பதற்கு சமுதாய மேம்பாடும் அவசியமாக்கப்படுகிறது அதன் ஒரு கட்டமாக ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் முக்கிய பங்கு வகிப்பது கல்வி தான் இதனைக் கொண்டு சமூகம் எழுச்சி பெறவேண்டும் மக்களுக்கான இவ்வாறான விழிப்பூட்டல்கள் ஊடாக வாசிப்பு பழக்கங்களை மேம்படுத்தவும் வாசகர் வட்டங்களை உருவாக்கவும் முன்வரவேண்டுமென்பதே எமது இப் புத்தகங்கள் வழங்கும் நோக்கமாகும் எனவும் மேலும் கூறினார்.

LEAVE A REPLY