மனித உரிமைகள் ஆணைக்குவின் மட்டக்களப்பு அலுவலகம் இடமாற்றம்

0
200

(விஷேட நிருபர்)

மனித உரிமைகள் ஆணைக்குவின் மட்டக்களப்பு அலுவலகம் இடமாற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்ன உப்போடையில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய காரியாலயம் இல:46, கோவிந்தன் வீதி, மட்டக்களப்பு எனும் முகவரிக்கு நேற்று (11) வியாழக்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் அரச நிருவாக, நிறைவேற்று அதிகாரிகள் மக்களது அடிப்படை உரிமையினை மீறினால் அது தொடர்பான முறைப்பாடுகளைக் கொடுக்க முடியும். ஆணைக்குழுவிற்கு இது தொடர்பான புலனாய்வுகளையும், விசாரணைகளையும் செய்யும் அதிகாரம் சட்டரீதியாக உள்ளது என்பதால் மக்கள் இக்காரியாலயத்தினை பயன்படுத்த முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY