கஞ்சாவுடன் சிரீலங்கா பொது ஜன ரொமுன கட்சியின் வேட்பாளர் கைது

0
419

காத்தான்குடியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிரீலங்கா பொது ஜன ரொமுன கட்சியின் வேட்பாளர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(7.1.2018) மாலை காத்தான்குடி 2ம்குறிச்சியில் 34 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இவர் காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மேலதிக வேட்பாளர் பட்டியலில் வேட்பாளராக இருக்கின்றார்.

ஹனிபா அப்துல் முனாப் எனும் இச் சந்தேக நபர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு பொலிசாரினால் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரை பொலிசார் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற நீதவானிடம் காத்தான்குடி பொலிசார் அனுமதி கேரிய போது எதிர் வரும் 14.1.2017ம் திகதி வரை இவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் நீதின்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY