மட்டக்களப்பு நாவலடி வாவிக்கரையோரம் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
94

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி வாவியோரம் சடலமொன்று இன்று (10) புதன்கிழமை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

70 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளது.

நாவலடி வாவியோரம் சடலமொன்று கரையொதுங்கி கிடப்பதை கண்ட பொது மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் வயோதிபரின் சடலமெனவும் இதுவரை அடையாளம் காணப்பட வில்லையெனவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY