கல்முனை பல்தேவைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

0
211

(அகமட் எஸ். முகைடீன்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான வீதியில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அருகாமையில் 2 மாடி பல்தேவைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (6) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த பல்தேவைக் கட்டடத்திற்கான அடிக்கல்லை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நட்டிவைத்து நிர்மாணப் பணியினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எம். சமீர் மௌலவியினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது.

IMG_2418 IMG_2345 IMG_2354 IMG_2360

LEAVE A REPLY