முதலமைச்சர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சியை போல ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும்

0
203

ஹஸ்பர் ஏ ஹலீம்)

எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலமைச்சர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சியை போல ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும்.அது மக்கள் நலன் கருதிய ஆட்சியாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாடு சென்னையில் உலக தமிழர் திருநாளும்¸உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த (05.01.2018) அன்று நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனும் சிறப்பு அதிதியாக மலேசிய நாட்டின் துணை கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் இவர்களுடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா¸ நடிகர் ராதாரவி உலக புகழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்¸மலேசிய நாட்டின் பாராளுமன்ற அங்கத்தினர்களான ரவி¸மணிவண்ணன் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்

.இதற்கான ஏற்பாடுகளை உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டாளருமான ஜே.செல்வகுமார் மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து அங்கு பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
உலக தமிழர் வம்சாவளி அமைப்பு ஒவ்வொரு வருடமும் பல துறைகளிலும் சாதித்த தமிழர்களை அழைத்து அவர்களை பாராட்டி கௌரவிப்பது மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகும்.இது தமிழர்களின் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.அது மட்டுமல்லாமல் பரந்து வாழுகின்ற தமிழர்களை ஒன்றினைக்கும் ஒரு விழாவாகவும் இது அமைந்துள்ளது.

எங்களுடைய நாட்டில் 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து தற்பொழுது மிகவும் அமைதியான ஒரு நாடாக அது இருக்கின்றது.எனவே உலகின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருக்கின்ற தமிழர்களிடம் நான் விடுக்கின்ற வேண்டுகோள் நீங்கள் எல்லோரும் எங்களுடைய இலங்கை நாட்டில் வந்து உங்களுடைய முதலீடுகளை அங்கே செய்ய வேண்டும்.அப்ப செய்கின்ற பொழுது தமிழர்களுடைய வாழ்வும் பொருளாதாரமும் இன்னும் சிறப்பாக இருக்கும்.எங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒரு உந்து சக்தியாக செயற்பட வேண்டும்.நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்கு எங்களுடைய அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இலங்கை தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற பொழுது முதலில் குரல் கொடுப்பவர்களாக தமிழக மக்கள் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்கின்றது.அதனை நான் வரவேற்கின்றேன்.அதே போல எங்களுடைய அனைத்து தேவைகளிலும் இந்திய அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகின்றது.இந்த உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக எங்களுடைய இலங்கையில் இருக்கின்ற தமிழ் குழந்தைகளின் கல்விக்கு உதவிகளை செய்ய முடியுமாக இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய சிறந்த முதலமைச்சராக செயறபட்ட மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனை தந்தது இலங்கை நாடு.அவர் அங்கிருந்து இங்கு வந்து இங்குள்ள மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்தவர்;.அது மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களுக்கும் அதிக உதவிகளை செய்தவர்.

அவர் என்றுமே மக்களை பற்றியே சிந்தித்தவர்.அவர் மறைந்தாலும் அவர் மக்களின் மனங்களில் இருந்து இன்னும் மறையவில்லை.அவருடைய திட்டங்களை மத்திய அரசாங்கமே பாராட்டுகின்ற அளவிற்கு இருந்தது.இன்று அவர் இல்லாத அந்த குறையை இந்த மக்கள் உணருகின்றார்கள்.

எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களாக வர இருப்பவர்களை நான் வரவேற்கின்றேன்.அவர்கள் வெற்றி பெற்ற பின்பு மறைந்த எம.ஜி.ராமச்சந்திரனை போல வர வேண்டும்.அவர் செய்த சேவைகளை மீண்டும் செய்ய வேண்டும்.அவரை ஒரு உதாரண புருசராக கொண்டு செயற்பட வேண்டும்.அப்படி செய்தால் நிச்சயமாக இந்த மக்களின் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படும்.

எங்களுடைய நாட்டில் நாங்கள் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றோம்.விசேடமாக கல்வியில் குறிப்பிடக்கூடிய அளவு முன்னேற்றம் கண்டு வருகின்றோம்.எங்களுடைய பாரிய சவாலாக இருப்பது கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளே. எனவும் அவர் குறிப்பிட்டார்.

IMG_0435 IMG_0460 IMG_0468 IMG_0482 IMG_0496 IMG_0504 IMG_0507 IMG_0514 IMG_0482 (1) IMG_0496 (1) IMG_0520 (1) IMG_0530 (1) IMG_0544 (1) IMG_0546 (1) IMG_0551 IMG_0567 IMG_0572 (1) IMG_0568 IMG_0705 IMG_0385

LEAVE A REPLY